திங்கள், மே 30, 2011

பரிபூரணம் அக்கா

ஒரு மத்தியான நேரத்தில் தர்மசங்கடமான நிலையில் பரிபூரணம் அக்காவையும் அவர் தம்பி சந்திரனையும் மிக நெருக்கத்தில் சந்தித்தேன். மிகுந்த தயக்கத்துடனும் அவமானத்துடனும் எனது வீட்டின் வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்கள். என் அம்மா அவர்களுடன் மிகஉக்கிரமாய் சண்டையிட்டுகொண்டிருந்தார். பரிபூரணம் அக்காவின் தந்தை என் வீட்டிலுள்ள அயன்பாக்ஸை ரிப்பேர் செய்கிறேன் என்று எடுத்து சென்றவர் அதனை விற்று அந்த பணத்தில் குடித்துவிட்டு வந்திருக்கிறார் என்ற செய்திதான் எனது அம்மாவை ரவுத்திரமடைய செய்திருந்தது. சற்றுநேரத்திற்கு பின் சமநிலையடைந்தவர் சிறு பிள்ளைகளுடன் சண்டையிட்டதின் குற்றஉணர்ச்சியாலேயோ, தந்தையின் தவறுக்கு நாணி நிற்கும் பிள்ளைகளைக் கண்டதாலோ மேற்கொண்டு பேச விரும்பாமல் அமைதிகாத்தார். ஒரு மாதத்தில் பணத்தைதிருப்பி தருவதாக பரிபூரணம் அக்காவின் உறுதிமொழியுடன் அன்றைய சண்டையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தது.
சுமார் இரு வாரங்களுக்கு முன்புதான் பரிபூரணம் அக்காவின் குடும்பம் எங்களது தெருவில், ஒரேயொரு அறையுள்ள ஒரு வீட்டில் குடிவந்தது. பரிபூரணம் அக்கா, சந்திரன் மற்றும் அவர்களது பெற்றோர் என மொத்தம் நான்கே பேர்தான் அவர்களது குடும்பத்தில்.  அவர்கள் தெருவில் யாருடனும் சிநேகம் பாவிக்காமல் தனித்த்தீவாகவே இருந்தார்கள். அத்தந்தை பழைய இரும்பு பித்தளைக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்தார். அதனால் காலையில் வீட்டை விட்டு செல்பவர் மாலை ஆறு மணிக்கு மேல்தான் திரும்பி வருவார். ஆனால் என்றுமே குடிக்கால் வந்ததில்லை. பரிபூரணம் அக்காவின் அம்மா நித்திய நோயாளி. வீட்டில் சமையல் வேலைகள்கூட செய்யாமல் எந்நேரமும் படுக்கையிலேயே இருக்கும் ஒரு விநேத ஜீவன். அக்குடும்பத்தின் அச்சாணியாக இருந்ததென்னவோ பரிபூரணம் அக்காதான். சந்திரன் என்னுடன் பள்ளியில் படித்துவந்தான்.  எனக்கு நிதமும் கிடைக்கும் இட்லியும், தோசையும் சந்திரனுக்கு தீபாவளிக்கும், பொங்கலுக்கும் மட்டுமே கிடைக்கும் என்பதின் அர்த்தம் எனக்கு நீண்ட நாட்களுக்கு புரியவில்லை.
பரிபூரணம் அக்கா செய்யாத வேலை என்று ஒன்றுமில்லை. களையெடுத்தல், நாற்றுநடுதல், கதிரறுத்தல், புல் அறுத்து மூட்டையாக கட்டி வீடுகளுக்கு கொடுப்பது, ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருட்கள் வாங்கி கொடுப்பது, பால் கறந்து கொடுப்பது, ஆடு வளர்ப்பது, கோழி வளர்ப்பது, ஏன் ஒருமுறை கொத்தனாருக்கு சித்தாளாக வேலை செய்வதைக்கூட பார்த்திருக்கிறேன். இவற்றுக்குமிடையில் வீட்டில் சமையல் செய்வதும், ஆயிரம் பீடிக்கு குறையாமல் சுற்றுவதும் என்றுமே தவறியதில்லை. அவருடைய ஒரே நோக்கம் சந்திரனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதுதான். தினமும் பள்ளிகூடத்திற்கு அழைத்து செல்லும் போதும், வரும் போதும், அதையே சொல்லி சொல்லி வளர்த்தார்கள். அதற்கேற்றாற்போல் சந்திரனும் மிக நன்றாகவே படித்தான். அனைத்து ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாகவே இருந்தான். நன்றாக படித்து நல்ல வேலையிலமர்ந்து அக்காவை காப்பாற்றுவேன் என்று மனதிற்குள் வீரசபதமே செய்திருந்தான் என தோன்றியது. பள்ளியைப்பற்றி அவனுக்கு இருந்த ஒரேயெரு சந்தேகம் ஏன் மதியம் மட்டும் உணவு கொடுக்கிறார்கள், காலையும், மாலையும் கொடுப்பதில்லை என்பதுதான்.
ஒரு நன்நாளில் பரிபூரணம் அக்காவிற்க்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக செய்தி தெருமுழுவதும் நமட்டுச்சிரிப்புடன் சொல்லப்பட்டது. என் அம்மாவிடம் அதைப்பற்றி கேட்டபொழுதுபோய் பாட புஸ்தகத்தை எடுத்து படிடா, பெரிய மனுஷனாட்டம் கேள்வியெல்லாம் கேட்டுகிட்டுஎன்று திட்டிவிட்டு அகன்று சென்றார். பரிபூரணம் அக்காவும் அவரது கணவரும் தம்பதி சமேதராய் மறுவீட்டிற்காக பரிபூரணம் அக்காவின் வீட்டிற்க்கு வந்தபோதுதான் நான் பார்த்தேன். நன்கு உயரமாய், சுருட்டை முடியுடன், பெரிய மீசையுடன், கிராமத்து மனிதருக்குறிய அனைத்து லட்சணங்களுடனும் நன்றாகவே இருந்தார். வெற்றிலை தோட்டம் வைத்திருக்கிறார் என்றும், நல்ல வருமானம் உள்ளவர் என்றும் தெரியவந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதைப்போலவே அவரும் சந்திரனின் படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இனி பரிபூரணம் அக்கா எந்தவித வேலைக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லையென்று கூறினார். ஆனால் பரிபூரணம் அக்கா மாப்பிள்ளையுடன், மாப்பிள்ளையின் வீட்டிற்க்கு செல்லவில்லை, அவருடைய வீட்டிலேயே இருந்தார். இரண்டாம்தாரமாய் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்ற காரணம் அதன்பின்புதான் எனக்கு தெரிய வந்தது. 
பரிபூரணம் அக்காவின் கணவர், மிகச்சரியாய் மதிய சாப்பாட்டின் நேரத்திற்க்கு பரிபூரணம் அக்காவின் வீட்டிற்க்கு வருவார். அவர் வரும்போதெல்லாம் அம்மா என்னையும், சந்திரனையும் அழைத்து தொலைக்காட்சியின் முன்பு உட்காரவைத்துவிடுவார்கள். சிறிது நேரத்தில் பரிபூரணம் அக்காவின் அம்மாவும், அப்பாவும் கூட எங்களது வீட்டிற்க்கு வந்து தொலைக்காட்சி பார்க்க ஆரம்பிப்பார்கள். சில சமயம் எனது வீட்டிலேயே அவர்கள் மதிய உணவையும் உண்பார்கள்.  ஒரு நாள் தொலைக்காட்சி வேண்டாம்மென்றும், விளையாடவே பிரியம் என்று நான் சொன்னதற்க்கு, எப்போதுமே என்னை அடிக்காத  அம்மாவிடமிருந்து எனக்கு இரண்டு அடி கிடைத்தது. மூன்று மாதங்களுக்கு பின் பரிபூரணம் அக்கா மறுபடியும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்கள். ஒன்றரை வருடத்திற்குள்ளாகவே பரிபூரணம் அக்காவிற்க்கு அழகிய பெண்குழந்தை பிறந்தது. அதற்கு செல்வ லட்சுமி என்று சந்திரன்தான் பெயர் சூட்டினான். பரிபூரணம் அக்காவின் கணவரின் வருகை இப்பொழுது வாரத்திற்கு ஒன்றாய் சுருங்கிவிட்டது.
நன்றாக படித்த சந்திரனுக்கு பட்டபடிப்பு முடித்தவுடனேயே ஆசிரியருக்கான வேலை கிடைத்தது. வேலை கிடைத்துவிட்டது என்று தெரிந்தவுடன், நமட்டுசிரிப்புடன் வம்பு பேசிய அனைவரும், அன்னோன்யம் பாராட்ட ஆரம்பித்தார்கள். வந்த அனைவரும் அவர்களது சொந்தத்திலேயே பெண் இருப்பதாகவும், வேறு எங்கும் செல்ல வேண்டாமென்றும் சொல்லி சந்திரனை தங்கள் வீட்டுமாப்பிள்ளையாக்கி கொள்வதற்கே ஆர்வம் காட்டினார்கள். இந்த நேரத்தில்தான் புயலென வந்தார் புனித சூசை. புனித சூசை எங்கள் ஊரின் போஸ்ட் மாஸ்டர். அவர் பரிபூரணம் அக்காவின் தாய்மாமன் என்பது அதன் பின்புதான் ஊரிலுள்ள அனைவருக்கும் தெரியவந்தது. ஆசிரியர் வேலையில் இருப்பவருக்கு அதே படிப்பு படித்த பெண்தான் தகுதியானவள் என்று சொல்லி தனது மகளையே திருமணம் செய்வித்தார். மிக கவனமாய் உள்ளுரில் கிடைக்கவிருந்த வேலையை நிராகரித்துவிட்டு 80 கிலோமீட்டர் தள்ளியுள்ள ஊரில் வேலை கிடைக்க ஏற்ப்பாடு செய்தார்.
வேலையில் சேர்ந்த சந்திரன் முதல் ஒரு வருடம், மாதம் தவறாமல் பணம் அனுப்பி வந்தான். அதன்பின்பு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று இடைவெளிகள் அதிகமாகிக்கொண்டே சென்றன. தற்பொழுது முற்றிலும் நின்றுவிட்ட நிலைமைதான். இப்போது பரிபூரணம் அக்கா முன்பு செய்த அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். இப்பொழுதும் பரிபூரணம் அக்காவின் கணவர் வாரத்துக்கு ஒரு முறை வந்து கொண்டிருக்கிறார். அந்தசமயத்தில் செல்வ லட்சுமியும்,  பரிபூரணம் அக்காவின் பெற்றோரும் எனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஊராரின் நமட்டுசிரிப்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பரிபூரணம் அக்காவின் வீட்டிலிருந்து வீரசபதங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன, சந்திரனுக்கு பதில் செல்வ லட்சுமி, அவ்வளவுதான் வித்தியாசம்.



பின்குறிப்பு: இக்கதை கவிஞர் கலாப்ரியாவின்  அக்காவுடன் பிறந்தவர்கள் அதிஷ்டம் செய்தவர்கள்  என்ற கவிதையின் தாக்கத்தினால் எழுதப்பட்டது. 

24 comments :

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் மழை எனை நனைத்ததே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பதிவு .. முதல் பதிவு பரி பூரண திருப்தி

பெம்மு குட்டி சொன்னது…

///பதிவு .. முதல் பதிவு பரி பூரண திருப்தி////

நிஜமாவே உங்களுக்கு பிடிச்சிருக்கா???

புதுகை.அப்துல்லா சொன்னது…

நல்லாருக்கு.

பெம்மு குட்டி சொன்னது…

//புதுகை.அப்துல்லா கூறியது...
நல்லாருக்கு.///

தேங்க்ஸ் அப்துல்லா அண்ணா........வசிஷ்டரே பாராட்டினமாதிரி இருக்கு :-)))))))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கதை அருமை, முதல் கதை என்று நம்ப முடியவில்லை....! வாழ்த்துக்கள் பெம்முகுட்டி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தொடர்ந்து எழுதுங்க....!

பெம்மு குட்டி சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது........… கதை அருமை, முதல் கதை என்று நம்ப முடியவில்லை....! வாழ்த்துக்கள் பெம்முகுட்டி!///


நன்னி, நன்னி பன்னிக்குட்டி அண்ணா!!!!!! :))))))))))))))

எல் கே சொன்னது…

நல்ல இயல்பான நடை

பெம்மு குட்டி சொன்னது…

///எல் கே சொன்னது…
நல்ல இயல்பான நடை //

உங்களது கருத்துக்கு மிக்க நன்றி...

மணிஜி சொன்னது…

நல்ல கரு..இன்னும் முயற்சித்தால் நல்ல நடை வளரும்..வாழ்த்துக்கள்..

பெம்மு குட்டி சொன்னது…

///மணிஜி...... சொன்னது…
நல்ல கரு..இன்னும் முயற்சித்தால் நல்ல நடை வளரும்..வாழ்த்துக்கள்..//

நன்றி மணிஜி............முதல் பதிவுக்கே பெரிய பெரிய தலைங்கலெல்லாம் வந்து வாழ்த்து சொல்றீங்க.....ரொம்ப சந்தோஷமாயிருக்கு.....Once Again Thank you very much

செல்வா சொன்னது…

முதல் முயற்சினு சொல்ல முடியாத அளவு உங்க எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்குங்க :-) உண்மைலேயே ரசிச்சேன்!

பெம்மு குட்டி சொன்னது…

///கோமாளி செல்வா கூறியது...
முதல் முயற்சினு சொல்ல முடியாத அளவு உங்க எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்குங்க :-) உண்மைலேயே ரசிச்சேன்!///


நன்றி செல்வா

ரவி சொன்னது…

Good One. Write more.

செந்தழல் ரவி

பெம்மு குட்டி சொன்னது…

///Ravindran கூறியது...

Good One. Write more.

செந்தழல் ரவி/////

உற்சாகமுட்டும் உங்களது கருத்துக்கு மிக்க நன்றி

Unknown சொன்னது…

நல்ல கரு ஆனால் கதையை நேரடியாக சொல்லியிருக்கிறீர்கள்.. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஒரு ட்விஸ்ட் சேர்த்து இருந்தால் பிரமாதமாக வந்திருக்கும்...

வாழ்துக்கள்...

பெம்மு குட்டி சொன்னது…

// கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
நல்ல கரு ஆனால் கதையை நேரடியாக சொல்லியிருக்கிறீர்கள்.. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஒரு ட்விஸ்ட் சேர்த்து இருந்தால் பிரமாதமாக வந்திருக்கும்...

வாழ்துக்கள்...//


நான் பஸ்ஸுல சொன்னது ''நாச்சியப்பன்''ங்கிற அடுத்த கதையை ....:-))))

Anyway Thanks for your suggestions

manjoorraja சொன்னது…

கதை நல்லா இருக்கு. முதல் கதை என நம்ப முடியலெ..

வாழ்த்துகள்.

மணிகண்டன் சொன்னது…

உங்க ப்ளாக் முதல்முறையா பார்க்கறேன். முதன்முதலா எழுதற அடையாளம் இல்லாம நல்லாவே இருக்கு. அடிக்கடி எழுதுங்க.

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

yes...it's really good...

பெம்மு குட்டி சொன்னது…

//// மணிகண்டன் சொன்னது…
உங்க ப்ளாக் முதல்முறையா பார்க்கறேன். முதன்முதலா எழுதற அடையாளம் இல்லாம நல்லாவே இருக்கு. அடிக்கடி எழுதுங்க.

புதன், ௨௬ அக்டோபர், ௨௦௧௧ ௩:௨௨:௦௦ பிற்பகல் IST ////

Thanks Manikandan :-)

பெம்மு குட்டி சொன்னது…

நாஞ்சில் பிரதாப் சொன்னது…
yes...it's really good... ///


Thanks Nanjil :-)

பெம்மு குட்டி சொன்னது…

manjoorraja சொன்னது…
கதை நல்லா இருக்கு. முதல் கதை என நம்ப முடியலெ..

வாழ்த்துகள். ////


Thanks Manjoorar :-)