செவ்வாய், ஜூன் 04, 2013

புர்ஜ் கலீபா



சமீபத்துல துபாய் போய் சுத்தி பார்த்துட்டு வருவோம்ன்னு வீட்டம்மாவையும் கூட்டிகிட்டு கிளம்பியாச்சி, கூகுள் பிளஸ்லயும் ஒரு போஸ்ட் போட்டு எல்லார்கிட்டயும் கேட்டுகிட்டாச்சி …  இந்த பிளஸ்ல உள்ள தகவல்படி ஆன்லைன்ல 8.30 மணிக்கு  புக்பண்ணிட்டு ரெடியா கிளம்பியாச்சி
 … தரைத்தளத்திலேயே கொஞ்சம் போட்டோக்களோட அந்த கட்டிடத்தை எப்படி கட்டினாங்கன்னு குறிப்புகள் இருக்கு. அப்புறம் ஒரு லிப்ட், ஒரேடியா 124 மாடிக்கு கொண்டு போறாங்க. அவ்வளவு தான்  




நானும் பெரிய அப்பாடக்கர் போட்டோகிராபர்ன்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல :-)))))))

இது காலையில 08.30 மணிக்கு எடுத்தது, புர்ஜ் கலீபாவோட நிழல் விழுந்ததைத்தான் இப்படி போகஸ் பண்ணியிருக்கேன்






இந்த பில்டிங்கோட அலங்காரம் என் மனைவிக்கு ரொம்ப பிடித்து இருந்தது, அதையே ரொம்ப நேரமா ரசித்து பார்த்துட்டு இருந்தாங்க.. அதுல இரண்டு மூனு பிளாட் வாங்கிப் போடனும்ன்னு ஆர்டர் வேற போட்டு இருக்காங்க :-)))))








இந்த படத்துல கீழே இடதுபுறத்துல இருக்கிறது துபாய் மால் ன்னு தெரிந்தாலும், வலது புறம் இருக்கிறது என்னென்னு தெரியல….  ஏதாவது ஹோட்டலா இருக்கும்ன்னு நினைச்சாலும் அதுக்கு ஏன் இவ்வளவு பெரிய நீச்சல் குளம்ன்னு தோணுச்சி.







எங்கள கூட்டிகிட்டு போனது 124 வது மாடி, ஆனா அதுக்கும் மேலயும் சில மாடிகள் இருக்கு, அங்க கூட்டிகிட்டு போக மாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க …  விக்கில தேடுனப்போ 164 வது மாடி வரைக்கும் இருக்கும்ன்னும் 124 வது மாடிதான் அப்சர்வேஷன் மாடின்னு போட்டிருக்கு …..






லிப்ட் ல போறதுக்கு சரியா 1 நிமிடம் தான் ஆகுது. அதுக்குளே 124வது மாடி வந்துவிடும். காதுமட்டும்தான் ஜீவ்வுன்னு அடைக்கும், ஆனா மேல போற மாதிரியே இருக்காது … நல்ல டிசைன் ….
  


https://www.youtube.com/watch?v=3YstOv-x8xM




நான் முன்னாடியே சொன்னமாதிரி அனிமேஷன் ல இந்த கட்டடத்தை எப்படி கட்டுனாங்கன்னு தேதிவாரியா சொல்லுறாங்க. இந்த வீடியோ சரியா வரலன்னு நினைக்கிறேன்……..

  
https://www.youtube.com/watch?v=lTwL7lzn714 


அம்புட்டுதான் மக்களே :-))

6 comments :

கோவை நேரம் சொன்னது…

உலகின் உயர்ந்த கட்டிடம் சென்று வந்திருக்கிறீர்கள்..வாழ்த்துக்கள்..போக வேண்டிய ஆவலை தூண்டுகிறது

பட்டிகாட்டான் Jey சொன்னது…

Thanks for pictures, clips & info on world tallest building... :-)))

பெயரில்லா சொன்னது…

3.It is not Swimming pool. It is world's largest water fountain at Dubai Mall(http://en.wikipedia.org/wiki/The_Dubai_Fountain) & The Address Hotel

பெம்மு குட்டி சொன்னது…

///
கோவை நேரம் கூறியது...

உலகின் உயர்ந்த கட்டிடம் சென்று வந்திருக்கிறீர்கள்..வாழ்த்துக்கள்..போக வேண்டிய ஆவலை தூண்டுகிறது ///

நிஜமாவே நல்லாயிருக்கும் பாஸ், வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா போயிட்டு வாங்க, அது கொடுக்கிற மகிழ்ச்சியே அலாதிதான் .. :-)) கருத்துக்கு நன்றி ..

பெம்மு குட்டி சொன்னது…

/// பட்டிகாட்டான் Jey கூறியது...

Thanks for pictures, clips & info on world tallest building... :-))) //

பட்டிக்ஸ் , உங்களுக்கும் வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா போயிட்டு வாங்க ... உள்ளுர்ல டூர் போடுறதுக்கு பதிலா இப்படி ஒரு வெளிநாட்டு டூர்க்கு பிளான் பண்ணுங்க .... நல்ல கேமரா இருந்தா இத விட நல்ல நல்ல படங்கள் எடுக்கலாம் :-))

பெம்மு குட்டி சொன்னது…

// பெயரில்லா கூறியது...

3.It is not Swimming pool. It is world's largest water fountain at Dubai Mall(http://en.wikipedia.org/wiki/The_Dubai_Fountain) & The Address Hotel //

ஏன் பாஸ் உங்க பெயர் சொல்லக்கூடாதுன்னு ஏதாவது வேண்டுதாலா?? எனிவே, உங்களுடைய தகவலுக்கு நன்றி, இப்ப நீங்க சொன்ன பிறகுதான் ஞாபகம் வருது, 2013 புத்தாண்டு கொண்டாட்டத்தின் (December 31st mid night 12.00) போது எடுத்த போட்டோன்னு ஒன்னு தரைத்தளத்தில் பார்த்தேன், அதுல வாண வேடிக்கைகளுடன் கூட செயற்கை நீருற்றுகளையும் பார்த்த ஞாபகம் :-))