புதன், ஜூன் 05, 2013

துபாய் மால்


துபாய் மால் நடக்க நடக்க வற்றாத ஜீவ நீருற்று மாதிரி வந்துகிட்டே இருக்கு . பரப்பளவை வைத்து பார்க்கும் போது இதுதான் உலகத்துலே மிகப்பெரியமால்ன்னு வேற விளம்பரம் பண்ணுறாங்க , ஆனா இங்க தான் விலையும் நிறைய சொல்லுறாங்க.

இத தான் அருவின்னு வேற சொல்லிக் கொள்கிறார்கள். டேய் எங்க ஊர்ல வந்து குற்றாலத்துல அருவிய பாருங்கடான்னு கத்தி சொல்லாம் ன்னு தோனுச்சி, பக்கத்துல மனைவி இருந்த பயத்துல ஒன்னும் சொல்லாம வந்துட்டேன் ;-)))


துபை மால் ல ஒரு பெண்கள் கைப்பை கடைக்கு போயிட்டு என்னோட மனைவி செலக்ட் பண்ணுனாங்க, பண்ணுணாங்க சுமார் ஒரு மணி நேரம், கடைசியா அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பை அகப்பட அதோட விலை 2399 திர்ஹாம்ஸ் ஒன்லி. கிட்டதட்ட 35000 இந்திய ரூபாய்கள்….. அத கேட்டதும் மிரண்டு போயிட்டேன், எங்க வாங்கித்தான் ஆகனும்னு சொல்லியிருவாங்களோன்னு பயந்திட்டு இருந்தேன் …. ஆனா கடைசில வேண்டாம்னு சொல்லிட்டாங்க, அத்தோட சரி, திரும்ப எந்த பொருளையும் வாங்கனும்னு சொல்லவேயில்லை … ;-))))))

துபாய் மால் ல எனக்கு ரொம்ப பிடிச்சது Dubai Under Water Zoo தான், சும்மா ஒவ்வொரு மீனும் பார்கிறதுக்கே அப்படி அழகா இருந்தது, பார்த்தா பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருக்கும். ஆனா அவ்வளவு மீன்களுக்கும் எப்படி உணவு போடுறாங்கன்னு தெரியில… அவ்வளவு சின்ன இடத்து அவ்வளவு நிறைய மீன்கள் இருக்கிறது சரின்னு தோணல.

மாலோட உள் அலங்காரமும் நல்லா இருந்தது. நட்சத்திரக்கூட்டம் மாதிரி சீலிங் மினுங்கிறது ஒரு இடத்துல இருந்தது, கீழ இருக்கிற படத்துல இருக்கிற மாதிரி  காகித வண்ணத்துப்பூச்சி யை ஒரு நூலில் கட்டி தொங்க விட்டிருந்ததும்  ரொம்ப அழகா இருந்தது….
இது ஒரு சின்ன வீடியோ
இதுல இன்னும் பார்க்கிறதுக்கு நிறையா இருக்கு … ஐஸ் பாளத்துல சறுக்கி விளையாடுறது, ரோலர் ஸ்கோட்டர் மாதிரி இருக்கிறதுல போறதுன்னு … ஆனா போட்டோ தான் சரியா விழவில்லை … துபாய் போனா மிஸ் பண்ணக்கூடாத இடம் …